SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை நடக்கிறது மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

9/12/2018 4:21:42 AM

சீர்காழி, செப். 12: 40 சதவீதம் மேல் ஊனம் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உத்தரவாதம் இருந்தும் இதுவரை பல மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கதொகை வழங்காததை கண்டிப்பது. ஊனமுற்றவர்கள் பட்டியலில் பெயர் இருந்தும் ரூ.1,500 வழங்க புகார் அளித்தும் பராமரிப்புத்தொகை வழங்காமல் காத்திருப்பு பட்டியல் ஒட்டப்படாமல் ஒப்புதல் ரசீது வழங்காமல் இருப்பதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி தாலுகா அலுவலகம் முன் அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்க வட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் ராணி, வட்ட செயலாளர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் நீலமேகம் வரவேற்றார். நிர்வாகிகள் சுரேஷ்குமார், முருகன், காளிதாஸ், நடராஜன், சுதா, பாலு, ரமேஷ், சத்தியசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அருள்மணி, சொக்கலிங்கம் ரவிந்திரன், அறிவழகன், தாரைச்செல்வன், ஸ்டாலின், கணேசன் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்