SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அண்ணா பிறந்த நாளையொட்டிபள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

9/12/2018 4:21:33 AM

நாகை, செப். 12: அண்ணா பிறந்த நாளையொட்டி நாகையில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நாளை நடக்கிறது.  நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டு பிரிவால்  முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 2018ம் ஆண்டுக்கான  மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி, மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவியர்கள் 10 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவியர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வகுப்பு, வயது சான்றிதழை அவரவர் பயிலும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்