SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைத்தீஸ்வரன்கோயில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் கழிவுநீர் கலப்பதால் பக்தர்கள் அவதி

9/12/2018 4:21:24 AM

சீர்காழி, செப். 12: சீர்காழி  அருகே வைத்தீஸ்வரன்கோயில்  சித்தாமிர்த தீர்த்தகுளத்தில் கழிவுநீர் கலப்பதால் பக்தர்கள் அவதிப்பட்டு  வருகின்றனர். குளத்தில் இறங்கி போராட்டம் நடத்த இந்து மக்கள்
கட்சி முடிவு  செய்துள்ளது. சீர்காழி  அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்  நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி  சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இந்த கோயிலுக்கு தினம்தோறும்  ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த  தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும்  என்பது ஐதீகம். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சித்தாமிர்த குளத்தில்  நீராடி விடடு சாமி தரிசனம் செய்து வழக்கம். சித்தாமிர்த தீர்த்த குளத்தில்  தண்ணீர் மாசடைந்து கழிவுநீர் கலப்பதாக பக்தர்கள் சிரமத்துக்கு

உள்ளாகி  வருகின்றனர்.இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர்  சுவாமிநாதன் கூறுகையில், வைத்தியநாதசாமி கோயிலில் உள்ள சித்தாமிர்த புனித  தீர்த்த குளத்தில் நீராடி வழிபட்டால் பல்வேறு நோய்கள் தீரும் என்பது  இன்றும் பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தாமிர்த தீர்த்த  குளத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கழிவநீர் கலந்து வருவதால் தண்ணீர்  மாசடைந்து வருகிறது. நோயை தீர்ப்பதற்காக குளத்தில் குளிக்க வருபவர்களுக்கு  கழிவுநீர் கலப்பதால் மீண்டும் நோய் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  சித்தாமிர்த தீர்த்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்,  மாசடைந்த குளத்தின் தண்ணீரை அகற்றி விட்டு புதிய தண்ணீர் விடுவதற்கு  நடவடிக்கை எடுக்ககோரி இந்து மக்கள் கட்சி சார்பில் குளத்தில் இறங்கி  போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்