SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

9/12/2018 4:21:05 AM

மயிலாடுதுறை, செப். 12: குண்டர் சட்டத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (35).  இவர் மீது திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு வீசி கொலை செய்வது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற 30க்கும் மேற்பட்ட
வழக்குகள் உள்ளது. திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை, மயிலாடுதுறை பிரபல பைனான்ஸ் அதிபர் சுரேஷ் கொலை, காஞ்சிபுரம் மாவட்டம் தூசியில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவன்.  தற்போது இவர் மீது பெரம்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாகை எஸ்பி விஜயகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கலைவாணன் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது: மயிலாடுதுறை  பழைய பேருந்து நிலையத்தில் பத்திரிகை மற்றும் வாரப்பத்திரிகை விற்பனை  நிலையம் வைத்து நடத்தி வருபவர் ரமேஷ் (47).  சில நாட்களுக்கு முன்  வாரப்பத்திரிகையில் தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி நிலையம் குறித்த செய்தி  வந்தது குறித்து ஏற்பட்ட முன்விரோதத்தின் அடிப்படையில் கடந்த 9ம் தேதி  15க்கும் மேற்பட்டோர் துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ரமேஷ்  வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து   தனியார் கார் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி கார்த்தி மற்றும் சேந்தங்குடியை  சேர்ந்த ரவுடி பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும்  விசாரணை நடத்தி வள்ளலார் மேலவீதி சூர்யா (24), சபரிநாதன் (24), பூக்கொல்லை வடக்கு யாதவதெரு மணிகண்டன் (24), சேந்தங்குடி அப்பன்குளம் முத்து (24) ஆகியோரை போலீசார் கைது  செய்தனர்.  மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை:  வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்குமஞ்சக்கன்னி பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராசு (65). இவரது மனைவி சவுந்தரவள்ளி (60). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்தது.   இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கராசு, மனமுடைந்து பூச்சிமருந்து குடித்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராசு இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்