சின்னதாராபுரம் வடக்கு ஆதி பராசக்தி மன்றத்தினர் கஞ்சி கலய ஊர்வலம்
9/12/2018 4:20:40 AM
க.பரமத்தி, செப். 12: சின்னதாராபுரம் வடக்கு ஆதிபராசக்தி மன்றம் சார்பில் நடந்த கஞ்சிக்கலய விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் வடக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர விழாவையொட்டி தென்னிலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு கஞ்சிக்கலய விழாவில் அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வல விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு கஞ்சிக்கலய விழா ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட தணிக்கை இணை செயலாளர் வடிவேல் வரவேற்றார். சின்னதாராபுரம் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் சுலோச்சனா, ஓம்சக்தி ரமேஷ், இளங்கோவன், பிரகாஷ், கோபால், மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசினார். பிறகு கஞ்சிக்கலய ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வழிபாட்டு மன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட கஞ்சிக்கலய ஊர்வலம் அரசு கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், காவல் நிலையம் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் வழிபாட்டு மன்ற கோயிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக கஞ்சிக்கலயம், அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி கொண்டு சென்றனர். பிறகு வேள்வி பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மேலும் செய்திகள்
கரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்
கரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
எழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு
கரூர் தாந்தோணிமலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதி
தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி
கரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி