SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கரூர் மாவட்டத்தில் 2 மணி நேரம் பலத்த மழை

9/12/2018 4:20:20 AM

கரூர், செப். 12:  கரூர்  மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த  மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியைடந்தனர். கரூர்  மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20மிமீ. இதில், குறிப்பிட்ட அளவு  மழை தென்மேற்கு பருவ காலங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான  காலக்கட்டத்தில் பெறப்பட்டு வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை  சீசனில் குறிப்பிட்ட இலக்கை விட கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற்றுள்ளது.  இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரங்களில் அக்னி நட்சத்திர  வெயிலைப் போல சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கியது. இதனால், அனைத்து  தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மேலடுக்கு  சுழற்சி காரணமாக சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10மணி முதல் 12மணி  வரை இரண்டு மணி நேரம் கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, அணைப்பாளையம் போன்ற  பகுதிகளில் பலத்த மழை பெய்ததது. இந்த மழையின் காரணமாக, வெப்பம் தணிந்து  நேற்று குளிர்ச்சியான நிலை நிலவியதால் அனைத்து தரப்பினர்களும்  சந்தோஷமடைந்துள்ளனர். அதன்படி, கரூர்  12மிமீ, அரவக்குறிச்சி 55.2மிமீ,  அணைப்பாளையம் 21மிமீ, க.பரமத்தி 23.8மிமீ, குளித்தலை 21மிமீ, தோகைமலை  6மிமீ, கிருஷ்ணராயபுரம் 27மிமீ, மாயனு£ர் 12மிமீ, பஞ்சப்பட்டி 6.2மிமீ என  மாவட்டம் முழுதும் 184.20மிமி மழை பெய்துள்ளது. இதன் மொத்த சராசரி 15.35  என்பது
குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்