SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் கோரிக்கை நகராட்சி காலியிடத்தில் சமூக விரோத செயல்

9/12/2018 4:20:11 AM

கரூர், செப். 12: கரூர்  நகராட்சிக்குட்பட்ட கோதை நகரில் திறந்த நிலையில் உள்ள நகராட்சி  காலியிடத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது குறித்து கண்காணிக்க  வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ஈரோடு  செல்லும் சாலையில் கோதை நகர் உள்ளது. இந்த நகரின் கடை பகுதியில் கரூர்  நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. ஆரம்பத்தில் கம்பி வேலி போடாமல்  இருந்த இந்த பகுதியில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்ததால் கடந்த ஒரு  ஆண்டாக, காலியிடத்தை சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டது. ஆனால்,  நுழைவு வாயில் பகுதியில் உள்ள கேட் திறந்த நிலையில் உள்ளதால்,  இரவுநேரங்களில் ஏராளமானோர் உள்ளே சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத சசெயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே காலியிடத்தை  சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் அல்லது வேறு பயன்பாட்டுக்கு  கொண்டு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

  • franceworldleaders

    பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்