SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விபத்து ஏற்படுத்தும் மணல் குவியலை அகற்ற வேண்டும்

9/12/2018 4:20:03 AM

கரூர், செப்.12:   விபத்து ஏற்படுத்தும் மணல் குவியலை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  கரூர் வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் குறுக்குச்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் கரூர் மாவட்டம் வந்துசெல்லவும், நாமக்கல் மாவட்டமான வேலூர் பரமத்தி போன்ற பிற ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலையை ஓட்டுனர்கள் பயன்படுத்துகின்றனர். மழைநீரை சேமிக்க நெடுஞ்சாலைத்துறை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் மழைநீர் சாலையோரம் தேங்கியும், அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் கலந்தும் வந்தது. இதனால் சாலையோர மணல்தி ட்டுக்கள் உருவாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஓரமாக ஒதுங்க முடியாமல் தடுமாறுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் மிகவும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே மணல் குவியலை உடனடியாக அகற்றவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்