SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா ஊழலில் தொடர்புள்ள அமைச்சர், அதிகாரிகள் பதவி விலக கோரி கரூரில் 18ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

9/12/2018 4:19:43 AM

கரூர், செப்.12:  குட்கா ஊழலில் தொடர்புள்ள அமைச்சர், அதிகாரிகள் பதவி விலக கோரி கரூரில் 18ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுகவினர் திரளாக பங்கேற்க பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கரூர் மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற்றது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், வரவேற்று பேசினார். சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.சி.பழனிசாமி, மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மணிராஜ், பரணிமணி, முனவர்ஜான், எம்எல்ஏ ராமர், கருணாநிதி, கருப்பண்ணன்,மகேஸ்வரி மற்றும் அனைத்து ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்:  கோபாலபுரத்தில் இளைஞர் திமுக தொடங்கி இன்று திமுக தலைவர் வரை திராவிட இனமீட்பு போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. கருப்பு பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் ரூ.15லட்சம் வைப்புதொகை செலுத்துகிறோம், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்குவந்த மோடி தலைமையிலான பாஜக அரசை இனியும் வேடிக்கைபார்க்க முடியாது. பாஜகவின் காவி வண்ணக் கனவுகளை தூக்கி எறியவேண்டும். பெரியார், அண்ணா, பிறந்த தினம், கட்சிஉதயமான முப்பெரும்விழா செப்டம்பர் 15ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் விழாவில் திரளாக கலந்துகொள்வது.

 வாக்குசாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், இடமாற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, அக்டோபர் 6. 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குசாவடிகளிலேயே நடைபெறுகிறது. அனைத்து நிர்வாகிகளும் வாக்குசாவடி முகவர்களைக்கொண்டு இதில் முழுமையாக ஈடுபடுவதுடன், ஆளும்கட்சியின் போலி வாக்காளர் சேர்ப்பு, கட்சி அனுதாபிகளின் வாக்குகளை நீக்காமலும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றவேண்டும். மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாததை சுட்டிக்காட்டுவதோடு, உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி இனிவரும் காலங்களிலாவது தண்ணீர் தடையின்றி செல்ல அரச நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள்பிரதமர் ராஜீவ்கொலை வழக்கில் 27ஆண்டுகளாக சிறையில் இருக்கும்7பேரை விடுதலை செய்ய போர்க்கால அடிப்படையில் அரசு முன்வர வேண்டும்.

 கச்சா எண்ணை விலை குறைந்தபோதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக சேகர்ரெட்டி, செய்யாத்துரையை தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர்  பதவி விலக வலியுறுத்தி, வரும் 18ம்தேதி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்வது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

 • bangladeshfire

  வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்