SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆத்தூர் ஒன்றியத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பத்துக்கு ₹2 லட்சம் நிதி

9/12/2018 4:16:58 AM

ஆத்தூர், செப்.12: ஆத்தூர் ஒன்றியத்தில் திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
ஆத்தூர் ஒன்றியம் கூலமேடு கிராமத்தை சேர்ந்த திமுக அவைத்தலைவர் செல்லமுத்து(70). கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் வார்டு மெம்பர் மெய்யழகன்(52) ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் மரணம் அடைந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு திமுகவின் தலைமை கழகம் சார்பில் தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, நேற்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, 2 குடும்பத்தினரிடம் ₹2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செழியன், சுரேஷ்குமார், நகர செயலாளர்கள் பாலசுப்ரமணியம், வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், மல்லியகரை ராஜா, வரதராஜ், விநாயகபுரம் அரவிந்த், மந்தைவெளி கதிரேசன், செல்லியம்பாளையம் மனோகரன், நரசிங்கபுரம் ரமேஷ், தாண்டவராயபுரம் சசிகுமார், கீரிப்பட்டி அல்லி.நடராஜன், சிவாஜி, கருணாநிதி, அயோத்திராமன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்