SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் சிஇஓ அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இரவில் போராட்டம்

9/12/2018 4:16:32 AM

நாமக்கல், செப்.12: பள்ளிபாளையம் அரசு பள்ளி பெண் ஆசிரியைகள் மீது பொய் புகார் பரப்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் சிஇஓ அலுவலகம் வந்த ஆசிரியைகளை சந்திக்க, முதன்மை கல்வி அலுவலர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் நடத்தினர். பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் கருப்பண்ணனுடன் சேர்த்து 63 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 40பேர் ஆசிரியைகள். இங்கு பணியாற்றும் குறிப்பிட்ட சில ஆசிரியர்களையும், ஆசிரியைகளையும் தொடர்புபடுத்தி கலெக்டர், முதன்மைகல்வி அலுவலர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக புகார்கள் சென்று வருகிறது. அதே பள்ளியில் பணியாற்றும் 2 பட்டதாரி ஆசிரியரும், ஒரு முதுகலை ஆசிரியரும் சேர்ந்து இது போன்ற பொய் புகார்களை பரப்பி வருவதாக, பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் கூறி வந்தனர். ஆனால், தலைமை ஆசிரியர் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆசிரியைகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர். நேற்று மாலை, இது குறித்து முறையிட, ஒட்டுமொத்த ஆசிரிய, ஆசிரியைகளும் திரண்டு நாமக்கல் வந்தனர். அவர்கள் வரும் போது, முதன்மை கல்வி அலுவலர் உஷா, அலுவலகத்தை விட்டு வெளியே புறப்பட்டு கொண்டிருந்தார். ஆசிரியர்களை பார்த்ததும்,  குறித்த நேரத்தில் அலுவலகம் வரவேண்டும். நீண்ட நேரம் என்னால் உங்களுக்காக காத்திருக்க இயலாது என கூறி விட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரிய, ஆசிரியைகள், சிஇஓ அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். இவர்களுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராமு, மலர்கண்ணன், அத்தியப்பன், ரமேஷ் ஆகியோரும் காத்திருந்தனர்.

பின்னர், அவர்கள் சிஇஓவின் நேர்முக உதவியாளர் மணிவண்ணனை சந்தித்து, ஒரு புகார் மனு அளித்தனர். அதில் ஆசிரிய, ஆசிரியைகள் மீது பொய்ப்புகாரை தொடர்ந்து பரப்பும் ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். ஆசிரியர்கள் அலுவலகத்தில் காத்திருப்பதை நேர்முக உதவியாளர், முதன்மை கல்வி அலுவலரை மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சிஇஓ உஷா குறிப்பிட்ட சில ஆசிரியைகளை, போனில் அழைத்து விசாரித்தார். பிரச்னை குறித்து பள்ளியில் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து ஆசிரிய, ஆசிரியைகள் அங்கிருந்து இரவு 9 மணிக்கு கலைந்து  சென்றனர்.

பிரச்னையை வளரவிட்ட கல்வித்துறை அதிகாரிகள்
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 3 ஆண்டாக பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் கடந்த ஜூனில் ஓய்வு பெற்றார். அப்போது உதவி தலைமை ஆசிரியரை நியமிப்பதில் பிரச்னை எழுந்தது. பிச்சைமுத்து என்ற வேதியியல் ஆசிரியருக்கு கிடைக்க வேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பு, வேறு ஒரு ஆசிரியருக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் பிச்சைமுத்து, முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து முறையிட்டார். பின்னர் உதவி தலைமை ஆசிரியர் பணியிடம் பிச்சைமுத்துக்கு மாற்றி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தான் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை இழிவுபடுத்தி அதிக அளவில் புகார்கள், கல்வித்துறை அலுவலர்களுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சனையை முன்னரே அறிந்த முதன்மை கல்வி அலுவலர்  ஆசிரியர்களை அழைத்து விசாரிக்கவில்லை. இதனால் தான் ஒட்டுமொத்த ஆசிரிய, ஆசிரியைகளும் நேற்று திரண்டு முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்