காமராஜர் விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு
9/12/2018 4:16:17 AM
பரமத்திவேலூர், செப்.12: காமராஜர் விருது பெற்ற பரமத்திவேலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தை அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஜீவியா. இவர் ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்தார். தற்பொழுது நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் படிக்கும்போது நடந்த பாட்டுப் போட்டி, நடனப்போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 25க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளார்.
இவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் 2017- 18ம் ஆண்டுக்கான காமராஜர் விருதும், ₹20ஆயிரத்திற்கான காசோலையையும், தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி பாராட்டினார். காமராஜர் விருது பெற்ற மாணவி ஜீவியாவை, ஜேடர்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
விதிகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் சிறை தண்டனை
திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் உழவர் சந்தையில் உணவுபொருளில் கலப்படம் கண்டுபிடிக்க அரங்கு திறப்பு
கால்நடை மருத்துவமனையில் ₹1.86 கோடியில் சிடி ஸ்கேன் வசதி
காவேரி நகர் ரவுண்டானாவை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேந்தமங்கலம் வாரச்சந்தையில் புதியதாக கடைகள் கட்ட வியாபாரிகள் வலியுறுத்தல்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!