SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து மோகனூர், ராசிபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

9/12/2018 4:15:55 AM

நாமக்கல், செப்.12: மோகனூரில் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோகனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று திமுக சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகித்து பேசியதாவது: அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் கட்டணம் ₹70 இருந்து தற்போது ₹200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்கள் அனைவரும் முறைகேடு செய்து வருகிறார்கள். மோகனூர் வாங்கல் பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, 90சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுகஆட்சி 10 சதவீத பணிகளை முடிக்க 5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. தற்போது அந்த பாலத்தில், மின் விளக்கு கூட சரியாக எரிவதில்லை. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அதிமுக அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு காந்திசெல்வன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில சட்டத்திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் செல்வம், பேரூர் செயலாளர் செல்லவேள், ஒன்றிய பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட அவைத்தலைவர் உடையவர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், புதுப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூவராகவன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டாக்டர் இளமதி, துணை அமைப்பாளர் சத்தியபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், திரளான பெண்கள் காலிகுடங்களுடன் கலந்து கொண்டு, அதிமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பேரூராட்சி, குருசாமிபாளையம் பகுதியில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க கோரி, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான ராமசுவாமி, மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், குடிநீர் கட்டணத்தை குறைக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கவுதம், பட்டணம் பேரூர் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், பாலு, குணசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், குணசேகரன், பாலதண்டாயுதம், சத்தியபாபு, சுப்ரமணியம், இளைஞரணி சுரேஷ், மாரிமுத்து, பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் பாலுசாமி, பெருமாள், சுந்தரராஜன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்