SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கருணாநிதி மறைவால் உயிரிழந்த திமுக தொண்டர் குடும்பத்திற்கு ₹2லட்சம் நிதி உதவி வழங்கல்

9/12/2018 4:15:28 AM

நாமக்கல், செப்.12: திமுக தலைவர் கருணாநிதி மறைவால், அதிர்ச்சியில் உயிரிழந்த தொண்டர் குடும்பத்தினருக்கு ₹2லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் ஒன்றியம், துத்திக்குளம் 1 வது வார்டு செயலாளர் மணி, நாமக்கல் ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சி ஆண்டிபட்டிபுதூரை சேர்ந்த திமுக தொண்டர் ஆறுமுகம் ஆகியோர், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ₹2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் இருவரின் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், மணி மனைவி லட்சுமி, ஆறுமுகம் மனைவி சிலம்பாயி ஆகியோரிடம் தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட ₹2 லட்சம் நிதி உதவியை வழங்கினார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பழனிவேல், பேரூர் செயலாளர் தனபால், ஊராட்சி செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராணாஆனந்த், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்