SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

9/12/2018 4:15:08 AM

சேந்தமங்கலம், செப்.12:  கேரளா வியாபாரிகள் வருகையால், நாமக்கல் புதன்சந்தையில் மாடுகளின் விலை உயர்ந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்க விற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள். நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் எருமை, எருது, பசு, கன்றுக்குட்டிகள் என பல்வேறு பகுதிகளிலிருந்து, அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தது. கேரளாவில் இருந்தும், ஆந்திரா, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹13 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்தவாரம் ₹15 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கடந்த வாரம் ₹43 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல், 6ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுக்குட்டி ₹8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்