SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரபாளையத்தில் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டம்

9/12/2018 4:15:00 AM

குமாரபாளையம், செப்.12:  குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.  குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் காமராஜ் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் அறிவொளி சரவணன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சரவணன், மாவட்ட இணை செயலர் செங்கோட்டுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், ‘தமிழகத்தில் வாக்குக்கு பணம் பெறுவதை வாக்காளர்கள் நிறுத்தினால் மட்டுமே, உரிமைகளை கேட்டு பெற முடியும். குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலையும், சாயத்தொழிலையும் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் காவிரி ஆற்றையும் பாதுகாக்க, பொது சுத்திகரிப்பு நிலையத்தை விரைந்து அமைப்பது அவசியம்,’ என்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை பிரியா பேசுகையில், ‘சினிமாவில் கமல்ஹாசன் பல சாதனைகளை படைத்துள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் அவர் சம்பாதித்துள்ளதே போதும். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் தம்மால் முடிந்த நற்செயல்களை செய்யவே, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்,’ என்றார். இதில், கட்சியின் நிர்வாகிகள் சிபு, உதயகுமார், பெருமாள் உள்ளிட்ட பலர் கொண்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்