SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருச்செங்கோட்டில் 18ம் தேதி அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

9/12/2018 4:14:50 AM

திருச்செங்கோடு, செப்.12:  திருச்செங்கோட்டில் வரும் 18ம் தேதி, அதிமுக அரசை கண்டித்து, திமுக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ் வரவேற்றார். மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ், பொருளாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பரமானந்தம், நகர செயலாளர்கள் கார்த்திகேயன்,  வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனராசு, சண்முகம், தங்கவேல், பழனிவேல்,  தங்கவேல், சண்முகம், பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மதுராசெந்தில், ரங்கசாமி, சரவணசுந்தரம், கிரிசங்கர், கதிர்வேல் மாப்பிள்ளைமீரா, மீன்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் 15ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திலிருந்து அதிகமானோர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலம், தமிழக மக்களின் இருண்ட காலமாக இருக்கிறது. அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு ஊழல் செய்து வருகிறது. மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி, வரும் 18ம் தேதி திருச்செங்கோடு நகரத்தில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்