SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவேரிப்பட்டணத்தில் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் மக்கள் அவதி

9/12/2018 4:14:32 AM

காவேரிப்பட்டணம், செப்.12: காவேரிப்பட்டணத்தில், பேருராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
காவேரிப்பட்டணத்தில் 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சாக்கடை கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி வருவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டால், “நாங்கள் தூர்வார முடியாது. பொதுப்பணித்துறையினரிடம் போய் முறையிடுங்கள்” என்று கைவிரிக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போதாவது சாக்கடை கால்வாய்களை தூர் வாரி இருக்கலாம். இந்த கழிவுநீர் கால்வாய் பாலக்கோடு ரோடு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன் தொடங்கி, பனகல் தெரு 4 ரோடு நுழைவு வாயில், விநாயகர் கோயில், பஸ் நிலையம் வழியாக சென்று ஆற்றில் சென்று கலக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பஸ் நிலையம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கிடப்பதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம். நாளை 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தையொட்டி உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்