SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சௌட்டஅள்ளியில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

9/12/2018 4:14:24 AM

கிருஷ்ணகிரி, செப்.12: காவேரிப்பட்டணம் அடுத்த சௌட்டஅள்ளி கிராமத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் தண்டபாணி தலைமை வகித்தார். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினருமான சந்திரமோகன் பங்கேற்று பேசினார். அப்போது, ரேஷன் கடைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கோ, மாவட்ட வழங்கல் அலுவலருக்கோ, நுகர்வோர் சங்க அமைப்புகளுக்கோ தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில், நுகர்வோர் சேவை சங்க தலைவர் வேப்பனஹள்ளி கோபிநாத், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு செயலாளர் சக்தி மனோகரன், ஊர் பெரியவர்கள் சின்னசாமி, ராஜி, பழனி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், செல்போன் எண் மாற்றம் போன்ற குறைகள் அடங்கிய மனுக்களை பெற்ற குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். வருவாய் ஆய்வாளர் சங்கர் நன்றி கூறினார்.
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்