SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போச்சம்பள்ளியில் முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

9/12/2018 4:14:07 AM

போச்சம்பள்ளி, செப்.12: போச்சம்பள்ளியில். முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் முள்ளங்கிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், அதிகரித்துள்ளது. வயல்களுக்கே வந்து மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் விவசாயிகளுக்கான சிரமம் குறைந்துள்ளது. அறுவடை செய்யப்படும் முள்ளங்கியை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து மூட்டைகளில் அடைத்து, வியாபாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். அதற்குரிய தொகை உடனே கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், முள்ளங்கி வெப்பம் மற்றும் மித வெப்பம் பகுதிகளில் நன்கு வளரும். இது வேகமாக வளரக்கூடிய ஒரு பயிராகும். சுமார் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். அதிகமாக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிகளவில் முள்ளங்கியை சாகுபடி செய்து வருகிறார்கள். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் முள்ளங்கி மிகுந்த ருசி உடையதாக இருப்பதால் வெளியிடங்களில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. கடந்த வாரங்களில் கிலோ ₹4 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி, தற்போது ₹10 முதல் ₹12 வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்