SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மர்ம விலங்கு கடித்து 60 வாத்துக்கள் சாவு

9/12/2018 4:13:59 AM

தர்மபுரி, செப்.12:நல்லம்பள்ளியில் நேற்று இரவு மர்ம விலங்கு கடித்ததில் 60 வாத்துகள் உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் ராஜவீரப்பன். இவர் நல்லம்பள்ளி-சேலம் சாலையில் மாட்டுப்பண்ணை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் மாடுகளுடன், தனியாக ஒரு கொட்டகையில் 100க்கும் அதிகமான வாத்துக்களையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை மாடுகளுக்கு தீவனம் வைக்க ராஜவீரப்பன் அங்கு சென்றபோது, கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வாத்துக்களில் 60 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.

 கடந்தாண்டு கலெக்டர் பங்களா எதிரே உள்ள வீடுகளில் வளர்த்து வந்த கோழி, ஆடுகளை மர்ம விலங்கு கடித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதியமான்கோட்டைக்கு வந்த சிறுத்தை, நல்லம்பள்ளிக்குள் நுழைந்து அங்குள்ள வீடுகளில் இருந்த வாத்துக்களை கடித்து கொன்றது. தற்போது மர்ம விலங்கு கடித்து 60 வாத்துக்கள் இறந்துள்ளன. அந்த மர்ம விலங்கு எதுவாக இருக்கும் என வாத்துக்களின் உடலை, வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்