SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வேனில் திடீர் தீ டிரைவர் உயிர்தப்பினார்

9/12/2018 4:13:38 AM

சூளகிரி, செப்.12: சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு முட்டை அட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் சரக்கு வேன் ஒன்று புறப்பட்டது. சாமல்பள்ளம் என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. உடனே, வண்டியை நிறுத்திய டிரைவர் கீழே குதித்து உயிர்தப்பினார். அதற்குள் வேன் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்துக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்