SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை சதுர்த்தி விழா கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

9/12/2018 4:12:53 AM

ஊத்தங்ரை, செப்.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்தியாவில் மும்பைக்கு அடுத்தப்படியாக ஓசூர் பகுதியில் தான் சதுர்த்தி விழாவில் அதிகளவில் விநாயகர் சிலைகள் நிர்மாணித்து வழிபடுவதை கடைபிடித்து வருகின்றனர். நாளை சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டியில் செயல்பட்டு வரும் முத்து கலைக்கூடத்தில் பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், வலம்புரி விநாயகர், மூன்று தலை அனுமன் விநாயகர், பாம்பு விநாயகர், சிங்க விநாயகர், பசு விநாயகர், தர்பார் விநாயகர் என பல்வேறு வகையிலான 1 அடி முதல் 15 அடி விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.இதுகுறித்து கலைக்கூட நிர்வாகி முத்து கூறுகையில், இந்த விநாயகர் சிலைகளை வருடத்தில் ஒருமுறையே விற்பனை செய்தாலும் அவற்றிற்கான பணிகளை சுமார் 6 மாதங்களாக மேற்கொண்டு வருகிறோம்.

இதற்கு தேவையான பாகங்கள், மூலப்பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து தருவித்துக்கொள்கிறோம். பின்னர், சிலைகளாக வடிவமைத்து பல வண்ணங்கள் தீட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காகிதம், மரவள்ளிக்கிழங்கு மாவு, வாட்டர் கலர் போன்றவற்றை கொண்டு சிலை வடிவமைக்கப்படுகிறது. இங்கிருந்து தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விநாயகர் சிலைகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் தேவைக்காகவும் உடனுக்குடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இதேபோல், மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்