SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திரைக்கதை, வசனம் மட்டுமின்றி பன்முக திறமை கொண்ட ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி

9/12/2018 4:12:44 AM

கிருஷ்ணகிரி, செப்.12: சினிமாவிற்கு கதை, திரைக்கதை, சிறுகதை, கவிதை, செய்தி என பன்முக திறமைகளை கொண்ட ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா பேசினார்.  கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். பேராசிரியர்கள் அப்துல்காதர், சபாபதி மோகன் மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். கவிஞர் நந்தலாலா பேசுகையில், கருணாநிதி மட்டும் இல்லாதிருந்திருந்தால் நான் படித்திருக்க முடியாது. பெரியார் இல்லை என்றால் நானும், நீங்களும் படித்திருக்க முடியாது. மதங்கள் மறுத்த பெண்களுக்கு நாற்காலி வழங்கியது பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் என்பதை மறந்துவிட வேண்டாம். திரைக்கதைக்காக பத்தாயிரம் ரூபாய் சம்பளமும், கதாநாயகனை விட அதிக சம்பளமும் வாங்கிய ஒருவர் உண்டு என்றால், அவர் கருணாநிதி தான். மேலும் சினிமாவிற்கு கதை, திரைக்கதை, வசனம்,சிறுகதை, கவிதை, செய்தி என பல்வேறு முகங்களை கொண்ட ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி.

அரசியல் வரலாற்றில் மொழி ஆற்றலைப் பயன்படுத்தியது தலைவர் கருணாநிதி மட்டுமே. அவர் வெறும் அரசியல் தலைவர் அல்ல. பூம்புகார், தொல்காப்பியம், குறளோவியம், ரோமாபுரி பாண்டியன், பொன்னர்-சங்கர் எழுதிய கலைஞருக்கு பின்னால், கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று சொல்கிற கால கொடூரத்தை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார். முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான சபாபதிமோகன் பேசுகையில், அரை நூற்றாண்டு காலம் கழகத்தை கட்டிக்காத்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. மற்ற மாநிலங்களில் ஏட்டளவில் உள்ள சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை, அவர் தமிழகத்தில் சட்டமாக கொண்டு வந்தார். அவரின் ஒரு புன்னகை போதும், சட்டசபையை நடத்துவதற்கு. அவ்வளவு சக்தி வாய்ந்தது அவரது புன்னகை என்றார். கவிஞர் அப்துல்காதர் பேசுகையில், எதிரியையும் கலங்க வைத்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. அண்ணாவால் வியந்து பார்க்கப்பட்ட ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. எத்தனை ஆண்டுகள் பேசினாலும் அவரின் புகழை முழுமையாக சொல்ல முடியாது என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ., வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி, கீரைவிஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, நரசிம்மன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜன், மங்கை கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, எக்கூர் செல்வம், சுவாமிநாதன், பேரூர் செயலாளர்கள் பாபு, பாலன், பாபு சிவக்குமார், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நாராயணமூர்த்தி, ரஜினிசெல்வம், டாக்டர். மாலதி நாராயணசாமி, அமீன், ஆறுமுகம், குப்புராஜ், ஆதி மகேந்திரன், தமிழ்செல்வன், துரை(எ) துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்