SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடங்கம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்

9/12/2018 4:12:25 AM

தர்மபுரி, செப்.12: தர்மபுரி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சியில், சவுளுப்பட்டி, சித்தேஸ்வரநகர், முல்லைநகர், விநாயகர்கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். போதிய மழையில்லாததால், இந்த பகுதியில் நிலத்தடிநீர் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீரும் சரியாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காலிகுடங்களுடன் நேற்று காலை தர்மபுரி-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து வந்த பிடிஓ அலுவலக அதிகாரி ரவிசங்கர்நாத் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் பகுதியில் 100 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அடிபம்பு மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது வசதியானவர்கள் தங்களது வீடுகளில் அனுமதியின்றி 500 அடிவரை போர்வெல் போட்டு தண்ணீர் உறிஞ்சுவதால், எங்களுக்கு சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. வினியோகம் செய்யும் குடிநீரும் முறைகேடாக மோட்டார் வைத்து உறிஞ்சப்படுகிறது. எனவே எங்களுக்கு சீரான குடிநீரும், அடிபம்பில் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறியலை கைவிட மாட்டோம், என்றனர்.

 குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேடாக தண்ணீர் உறிஞ்சும் நபர்களின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரி உறுதியளித்தார். அதையேற்று மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் ஊருக்குள் சென்று ஆழ்துளைகிணறுகளின் கைபம்புகளை ஆய்வு மேற்கொண்டார். மறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்