SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை விநாயகர் கோயிலில் பக்தர்களுக்கு வழங்க 10,000 லட்டுகள் தயார்

9/12/2018 4:12:16 AM

தர்மபுரி, செப்.12:  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  நாடு முழுவதும் நாளை(13ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அன்று காலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்துதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு சாக்ஸபோன், தவில் கச்சேரி நடக்கிறது. வரும் 17ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது.   சதுர்த்தி நாளன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக, லட்டு பிரசாதக்குழு சார்பில் 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், பக்தர்கள் சிரமமின்றி சாமியை தரிசிக்க தேவையான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

  • bangladeshfire

    வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்