SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சடலத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்வு

9/12/2018 4:12:07 AM

தர்மபுரி, செப்.12: தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை அருகே வேட்ராயன்கொட்டாய் கிராமத்தில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை உறவினர்கள் வழக்கமான பாதை வழியாக மயானத்திற்கு எடுத்து செல்ல முயன்றனர். அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பட்டா நிலம் வழியாக கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இறந்தவரின் உறவினர்கள் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராதாகிருஷ்ணன், மதிகோன்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சடலத்தை வைத்து போராட்டம் நடத்தியவர்களிடமும், பட்டா உரிமையாளரிடமும் சடலத்தை கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில், வழக்கம்போல் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகளை முடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்