SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணிநேரம் தாமதமாக வந்தது

9/12/2018 4:11:58 AM

தர்மபுரி, செப்.12:  தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனிற்கு, நாகர்கோயில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணிநேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.  நாகர்கோயிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி வழியாக தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பெங்களூருக்கு செல்லும் இந்த ரயிலும் வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவு முழுவதும் நடுங்கும் குளிரில் தவித்தனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்தவர்கள் கடுமையான வேதனைக்குள்ளாகினர். ரயில்வே அதிகாரிகள் மின் ஒயர்களை சீரமைத்த பின், ரயில் புறப்பட்டது. எப்போதும், அதிகாலை 5.30 மணிக்கு தர்மபுரிக்கு வரும் ரயில், நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோயில், நெல்லை பகுதியில் இருந்து தர்மபுரிக்கு வந்த பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கியபோது மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்