SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைனான்ஸ் அதிபர் பலி

9/12/2018 4:11:49 AM

தர்மபுரி, செப்.12: தர்மபுரி  நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (48). பைனான்ஸ் அதிபர். இவரது  மனைவி ஜோதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை  மகேந்திரன், தன்னுடைய பைக்கில் சத்யா நகருக்கு சென்று விட்டு கிருஷ்ணகிரி சாலை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மகேந்திரன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்து வந்த தர்மபுரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து  குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தர்மபுரி போலீசார், தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்