SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தில் 1,200 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

9/12/2018 4:11:10 AM

தர்மபுரி, செப்.12:  தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1,200 இடங்களில்  சிலைகள் வைக்க போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (13ம்தேதி) கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சிலைகள் வைத்து மக்கள் வழிபாட்டில் ஈடுபடுவர். பின்னர் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வர். இதற்கு  அனுமதி கேட்டு அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மொத்தம் 1,200 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்றாவது நாளில் (16ம்தேதி) விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், சிலை வைக்கும் நபர்கள் தரப்பில் 5 பேர், தொடர்ந்து 3 நாளைக்கு 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபடுவர். மேலும், சிலைகளை கரைக்க, வாணியார் அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர்குழி அணை, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் காவிரி ஆறு ஆகிய 6 இடஙகள் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்