SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காரிமங்கலம் அருகே ஆம்னி பஸ், லாாி கண்ணாடி உடைப்பு

9/12/2018 4:10:41 AM

தர்மபுரி, செப்.12: பெங்களூருவில் இருந்து சேலம் சங்ககிரிக்கு கோழி தீவனம் ஏற்றிய லாரி கிருஷ்ணகிரியை கடந்து வந்து கொண்டிருந்தது. சங்ககிரி கஸ்தூரிப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு காரிமங்கம் மாட்லாம்பட்டி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் லாரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் டிரைவர் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு, பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ஆம்னி பஸ் சென்றது. அந்த பஸ் காரிமங்கலம் பைசுஅள்ளி அருகே வந்தபோது, மர்ம கும்பல் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் அனில்ஜோசப் (35).,
 இது குறித்து போலீசில் புகார் அளித்தார். ஒரே நாளில் லாரி, ஆம்னி பஸ் மீது மர்ம கும்பல் கல் வீசி மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு வழக்குகளையும் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்