SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாலையில் இயங்கும் சந்தையால் கடும் போக்குவரத்து பாதிப்பு

9/12/2018 4:10:32 AM

அரூர்,செப்.12: அரூர் கடைவீதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.  பேருந்துகள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடைவீதி வழியாக பேருந்து நிலையம் செல்வதால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து  செல்லும்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமைதோறும் அரூரில் வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு, காய்கறிகள், மளிகை பொருட்கள், ஜவுளி,  கயிறு, இரும்பு சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை  செய்யப்படுகிறது. வாரச்சந்தைக்கென சந்தைமேட்டில் இடம் ஒதுக்கீடு  செய்யப்பட்டபோதும், அங்கு இடம் குறைவாக இருப்பதாக கூறி அங்கு வியாபாரிகள்  சரிவர கடைகளை போடுவதில்லை. இதனால் சாலை ஓரத்தில் கடைகள் போட ஆரம்பித்து  தற்போது சந்தைமேட்டில் இருந்து கடைவீதி வரை வாரச்சந்தை நடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு  கூட்டம் நிரம்பி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு புதிய இடத்தை ஒதுக்கீடு செய்து, சாலையை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்