SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரியில் பரிதாபம் பார்வையற்ற பெற்றோருடன் கல்விக்காக கையேந்தும் மழலை

9/12/2018 4:10:17 AM

தர்மபுரி, செப்.12:  தர்மபுரியில் எல்கேஜி படிக்கும் மழலை, கல்விக்கட்டணம் கட்ட வசதியில்லாமல் பார்வையற்ற பெற்றோருடன் தினமும் கையேந்தி நிற்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
தர்மபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் பாண்டியன்(45). இவரது மனைவி நஞ்சம்மாள்(38). பார்வையற்ற இந்த தம்பதியின் மகன், கடத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறார். தினமும் மாலையில் பள்ளி முடிந்தவுடன், அந்த மழலை தந்தையையும், தாயையும் அழைத்துக்கொண்டு தர்மபுரி வருகிறான். புறநகர் மற்றும் நகர பஸ் ஸ்டாண்டில் குடும்பத்தினருடன் பிச்சை எடுக்கிறான். மகன் படிக்கும் பள்ளியில் கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக அவனுடன் பிச்சை எடுப்பதாக தம்பதியர் தெரிவிப்பது நெகிழ்ச்சியோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
   
இதுகுறித்து பார்வையற்ற நஞ்சம்மாள் கூறியதாவது:
கடத்தூர் அருகே சி.பள்ளிப்பட்டி தான் எங்களது சொந்த ஊர். 4ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. அப்போது கண்ணில் பச்சை தழையை கசக்கி கசாயமாக கண்ணில் ஊற்றினர். அப்போது இரண்டு கண்களும் வெந்து புண்ணாகியது. அதிலிருந்து எனக்கு 2 கண்களும் பார்வை இழந்தது. பெற்றோர் இறந்து விட்டதால், திருச்சியில் ஒரு கருணை இல்லத்தில் தங்கி, பிளஸ் 2 வரை படித்தேன். ஊதுபத்தி செய்யவும், சினிமா பாடல்கள் பாடவும் பயிற்சி எடுத்தேன். பெற்றோர் இல்லாததால், எனக்கு துணை தேவை என்று இல்லத்தில் கூறிய போது, அவர்கள் பிறவிலேயே பார்வையற்ற, படிக்காத பாண்டியன் என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

 அதன் பின்னர், கடத்தூரில் வாடகை வீட்டில் குடியேறினோம். இருவரும் ஊதுபத்தி வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்தோம். குழந்தைகள் பிறந்தனர். குடும்ப செலவுக்கான வருவாய் ஊதுபத்தியில் கிடைக்கவில்லை. இதனால், பிச்சை எடுக்க முடிவு செய்தோம். கடத்தூரை தவிர தர்மபுரி, கோவை, சென்னை போன்ற இடங்களுக்கு சென்று பிச்சை எடுப்போம். அதில் கிடைக்கும் வருவாயில் மகன்களை படிக்க வைக்கிறோம். பள்ளியில் அடிக்கடி பணம் கேட்பதால், எங்களிடம் பணம் இருப்பதில்லை. அதனால் எல்கேஜி படிக்கும் எனது மகன், கையை பிடித்து எங்களை பிச்சை எடுக்க அழைத்து செல்வான்.  அதில் கிடைக்கும் வருவாயை படிப்பு செலவுக்கு பயன்படுத்துகிறோம். இரு மகன்களையும் படிக்க வைக்க சிரமமாக உள்ளது. பிச்சை எடுக்கவும் உடல் ஒத்துழைப்பு தருவதில்லை. எனவே, எனது மகன்களின் படிப்பு செலவை நல்ல உள்ளங்கள் யாராவது ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்.

இவ்வாறு நஞ்சம்மாள் கூறினார். கல்வியாளர்கள் கருத்து ஆங்கிலப் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ண ஓட்டமும், இந்த தம்பதிகளின் பரிதவிப்புக்கு ஒரு காரணம். அதே நேரத்தில் 25சதவீத இடஒதுக்கீடு, அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் போன்றவை இது ேபான்ற அடித்தட்டு மக்களிடம் எளிதில் ெசன்று ேசராதது, ஆங்கிலப்பள்ளிகளின் கட்டணக் கொள்ளை போன்றவையும் இந்த அவலத்திற்கான முக்கிய காரணங்கள் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்