SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாட்கோ மூலம் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்

9/12/2018 1:32:25 AM

திருவாரூர்செப்.12: திருவாரூர்கலெக்டர்நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர்மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65ம், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.ஒரு லட்சமாகவும் இருக்க வேண்டும். இதில், மகளிர்வேளாண் நிலம் வாங்கும் திட்டம் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில்  முனைவோர்பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்,  உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பதாரர்கள் தாட்கோ இணைய தள முகவரி வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும்.  திட்டங்களுக்கு ஏற்றாற் போல் தேவைப்படும் ஆவணங்களையும் இணையதள பதிவில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.  மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகம், நாகை பைபாஸ் சாலை, திருவாரூரில் உள்ள அலுவலகத்திலும்  ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனவே திருவாரூர்மாவட்டத்தை சார்ந்தவர்ஆதி திராவிட இனத்தவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

  • CathedralShootingBrazil

    பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்