SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மன்னார்குடியில் நுகர்பொருள் வாணிபகழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் போராட்டம்

9/12/2018 1:32:01 AM

மன்னார்குடி, செப்.12: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ 6500 வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற பணியாளர்கள் மன்னார்குடி வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு சங்கத மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில தழுவிய முழக்க போராட்டத்தை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணி யம் துவக்கி வைத்து பேசினார். சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருவாரூர்  புண்ணீஸ்வரன், தஞ்சை கோவிந்தராஜன், நாகை  கோதண்ட பாணி, மாவட்ட செயலாளர் நாகேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்  செல்வராஜ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திர சேகர ஆசாத், இந்தியகம்யூனிஸ்ட்  மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் ஆகியோர் பேசினர்.
இறுதியில் ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்