SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலநம்மங்குறிச்சியில் குடிநீரின்றி மக்கள் கடும் அவதி

9/12/2018 1:31:38 AM

முத்துப்பேட்டை, செப்.12: முத்துப்பேட்டை அருகே மேலநம்மங்குறிச்சியில் மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக காலனி தெரு, அரசு பள்ளி அருகில் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீடு அருகில் ஆகிய மூன்று இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வரப்பட்டது. அதேபோல் இந்த கிராமத்தில் முக்கியமாக கருதப்படும்  வெள்ளகுளம், சிறிய வெள்ளகுளம், பெரியவெள்ளகுளம், வாசக்குட்டை என 4 குளங்கள் இந்த கிராமத்திற்கு நீராதாரமாக உள்ளது.
இந்த குளங்களை இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதைகள் தூர்ந்து விட்டதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது. அதே போல் போதிய மழை இல்லாததால் தற்பொழுது குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.  இதனால் மக்கள் அடுத்த ஊராட்சியான சிமேல்குடி பகுதிக்கு சென்றும்  குடிநீர் சுமந்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது கால்நடைகள் தண்ணீரின்றி பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  புகார் தெரிவித்தும் இப்பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி  மீனாட்சி சுந்தரம் கூறுகையில்: இப்பகுதி மக்கள் நலன்கருதி அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்