SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு

9/12/2018 1:30:51 AM

திருவாரூர்,செப்.12: திருவாரூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த நீதிமோகன்(52). கடந்த 8ம் ந்தேதி அலுவலக உதவியாளர் ராஜேந்திரனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் கடத்திச்சென்றனர்.தகவலறிந்த போலீசார் அனைத்து செக் போஸ்ட்களுக்கும் தகவலளித்ததோடு, நகரில் உள்ள சிசிடிவி பதிவில் கிடைத்த தடயங்களைக் கொண்டு  விசாரணையை தொடங்கினர்.தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் நீதிமோகனை விடுவிக்க ரூ10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னார்குடியை சேர்ந்த வெங்கடாசலம் உட்பட சிலருக்கும் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெங்கடாசலத்திடம் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். போலீசார்  நெருங்குவதை அறிந்த கடத்தல்காரர்கள் நீதிமோகனை தனியே விட்டு தலைமறைவாயினர். இதையறிந்த போலீசார் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை மீட்டனர். அங்கிருந்து திருவாரூர் அழைத்த வரப்பட்ட நீதிமோகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தல் தொடர்பாக வெங்கடாசலம் மற்றும் ஜான் கென்னடி ஆகிய இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் தலைமறைவாக உள்ள 4 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்