SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி 27வது வார்டில் 3மாதமாக குடிநீர் தட்டுப்பாடு

9/12/2018 1:30:33 AM

மன்னார்குடி, செப்.12: மன்னார்குடி 27 ஆம் வார்டில் மாதமாக நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 27 மற்றும் 29 வார்டுகளில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்தால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து நகராட்சி பொறியாளரை நேரில் சந்தித்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திட வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மன்னார்குடி 27 வது வார்டில் உள்ள காளி கவுண்டன் தெரு தொடர்ச்சி, ஆணைவிழுந்தான் குளம் தென்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 500 மேற் பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு அருகில் இபி  நகரில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது.  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் அதில் போடப்பட்டுள்ள போர்வெல் சரியாக செயல்படவில்லை என்ன கூறப்படுகிறது. அதனால் மேடான பகுதியில்  வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 3 மாத காலமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.பொதுமக்கள் இது குறித்து பலமுறை நகராட்சி  பணியாளர்களிடம்  கூறியும்  பலனில்லை.இந்நிலையில் 27வது வார்டு காளிகவுண்டன் தெரு தொடர்ச்சி, ஆணை விழுந்தான் குளம் தென்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி  பொறியாளர் இளங்கோவனிடம்கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ஒரு வாரத்தில் பிரச்னைகளை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகத்தை அளிப்பதாக  பொறியாளர் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்