SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரபேல் விமான ஊழலை கண்டித்து காங். கட்சியினர் இன்று பேரணி நாகர்கோவிலில் நடக்கிறது

9/12/2018 12:36:48 AM

நாகர்கோவில், செப்.12:  குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர் மகேஷ் லாசர், வட்டார தலைவர்கள் ராஜஜெகன், வைகுண்டதாஸ், ஜெரால்டு கென்னடி, அசோக்ராஜ், மகளிரணி தங்கம் நடேசன், கிறிஸ்டி ரமணி, முருகேசன், சேவாதள தலைவர் எனல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரபேல் விமான ஊழலை கண்டித்து, செப்டம்பர் 12ம் ேததி (இன்று) குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து பேரணியாக சென்று, குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிகழ்வின்போது காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொள்ள இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்