SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் விஷப்பாம்பு நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

9/12/2018 12:36:01 AM

நாகர்கோவில், செப்.12:       ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி பின்புற கேட் அருகே விஷப்பாம்பு கிடந்ததால், நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேப்ேபான்று தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த மருத்துவக்கல்லூரி வளாகம் பரபரப்பாக இருக்கும். மருத்துவமனைக்கு பஸ்களில் வரும் நோயாளிகளில் அதிகமானோர் மருத்துவக்கல்லூரி பின்புற கேட் வழியாக செல்வார்கள். இந்த கேட் அருகே நேற்று காலை அணலி வகையை சேர்ந்த கொடிய விஷப்பாம்பு ஒன்று கிடைந்தது.  இதை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.  இது குறித்து பொதுமக்கள் தரப்பில் காலை 7 மணியளவில் நாகர்கோவில் வனத்துறைக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது.

ஆனால் காலை 9.30 மணி ஆனபிறகும் வனத்துறையில் இருந்து யாரும் வரவில்லை.இந்நிலையில், அந்த பாம்பு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து மெதுவாக ஊர்ந்து, மருத்துவக்கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தம் வந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் சிலர் அந்த விஷப்பாம்பை பிடித்து பையில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவக்கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • reptileshome_french

    பிரெஞ்சுயில் 400 ஊர்வனவற்றை வீட்டில் செல்லப்பிராணிகளாக வைத்து வாழும் அதிசய மனிதன் !

  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்