SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செப். 22ல் தமிழக முதல்வர் வருகை கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் ஆய்வு

9/12/2018 12:35:08 AM

கன்னியாகுமரி, செப், 12: குமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 22ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் தங்குகின்றனர்.

முதல்வர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மெயின் கெஸ்ட் ஹவுஸ், புதிய விருந்தினர் மாளிகை, பாரதி விருந்தினர் மாளிகை ஆகியவற்றை மதுரை மண்டல தலைமை பொறியாளர் (கட்டுமானம்) ரவீந்தர், குமரி மாவட்ட செயற்பொறியாளர் கணேசன், விருதுநகர் மாவட்ட செயற்பொறியாளர் நம்பிராஜன், நெல்லை மாவட்ட செயற்பொறியாளர் (மருத்துவ பணிகள்) நாகராஜ், உதவி செயற்பொறியாளர் (நாகர்கோவில்) மணிவண்ணன், கன்னியாகுமரி உதவி பொறியாளர் அனிஷ், உதவி செயற்பொறியாளர் (மின்பிரிவு) சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.முதல்வர் தங்கும் அறை, கார் பார்க்கிங் போன்றவற்றை பார்வையிட்டு பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர். முன்னதாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபத்தில் ₹10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்