SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திற்பரப்பு-திருவட்டார் சாலையில் பரபரப்புஇளம் ஜோடி கட்டிப்பிடித்து சில்மிஷம் பொதுமக்கள் அடித்து விரட்டினர்

9/12/2018 12:31:54 AM

குலசேகரம், செப்.12: திற்பரப்பு-திருவட்டார் சாலையில் பைக்கை நிறுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட இளம் ஜோடியை பொது மக்கள் அடித்து துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.குமரி மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை திற்பரப்பு, மாத்தூர் தொட்டிபாலம், கோதையாறு, பேச்சிப்பாறை ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன. இங்கு இளம் ஜோடிகள் எல்லை மீறுகின்ற சம்பவங்களும் அரங்கேறுகின்றன.  நேற்று முன்தினம் ஒரு இளம் ஜோடி நடு வீதியில் எல்லை மீறி இருக்கின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு: குமரியில் முழு அடைப்பு காரணமாக நேற்று முன்தினம் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் முக்கிய வீதிகள், பஸ் நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. திற்பரப்பு அருவி பகுதியில்  மதியம் சொற்ப அளவிலேயே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. சுமார் ஒரு மணியளவில் டிப்டாப் உடை அணிந்து கொண்டு ஒரு இளம் ஜோடி அந்த பகுதியில் வலம் வந்தது.

சுமார் 18 வயதுதான் அந்த ஜோடிக்கு இருக்கும். புது மண தம்பதிகள் போல அந்த பகுதியை சுற்றி சுற்றி  வந்தனர். ஒரு கட்டத்தில் திற்பரப்பு - திருவட்டார் சாலையோரம் பைக்கை நிறுத்தினர். உடனே பின்னால் அமர்ந்து இருந்த இளம் பெண் இறங்கினார். நடுரோடு என்றும் பராமல் வாலிபரை இரு கைகளாலும் இருக கட்டிபிடித்துக் கொண்டார். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக இருவரும்  முத்தம் கொடுக்க தொடங்கினார். பட்டப்பகலில் நடுவீதியில் இந்த ஜோடியின் அநாகரீக செயலை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்றனர். ஆனால் இளம் ஜோடி எதையுமே கண்டு கொள்ளவில்லை.   சுமார் அரை மணி நேரம் அவர்களது சேட்டை தொடர்ந்தது.

ஆனால் போக போக இருவரும் எல்லை மீறத் தொடங்கினர். இதை அந்த வழியாக காரில் வந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து காரை சாலையோரமாக நிறுத்தியவர் இளம் ஜோடியை நோக்கி வேகமாக  சென்றார். இளம் ஜோடியின் அருகில் சென்றது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்துகாரில் வந்தவர் அந்த வாலிபரை பிடித்து கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். இளம் பெண்ணையும் கடுமையாக எச்சரித்தார். இதனால் இருவரும் நிலை குலைந்து போனார்கள். இந்த நேரத்தில் வேடிக்கை பார்த்த பலர் வேகமாக வந்து இளம் ஜோடியை அங்கிருந்து துரத்தினர். நிலைமையை உணர்ந்து கொண்ட இளம் ஜோடி பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக திற்பரப்பு அருவியை நோக்கி  சென்றது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்