SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருங்கல் காவல் நிலையத்தில் மைனர் காதலனுடன் இளம் பெண்ணை சேர்த்து வைத்த போலீஸ் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

9/12/2018 12:31:21 AM

கருங்கல், செப்.12: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இளைய மகள் அஞ்சு (20, பெயர் மாற்றம்) ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் படிப்பை தொடராமல் விட்டுவிட்டார்.இதற்கிடையே மதுரை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அஞ்சு வீட்டின் அருகில் வசித்து வந்தார். அந்த வாலிபருக்கு 19 வயதுதான் ஆகிறது. அஞ்சுவுடன் அந்த வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் நேரிலும், போன் மூலமும் காதலை வளர்த்து வந்தனர். மகளின் காதல் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அஞ்சு காதலை தொடர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மூத்த சகோதரி வீட்டில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 25ம் தேதி அஞ்சு சகோதரி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து பெற்றோர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் மதுரை வாலிபரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் மாயமான அஞ்சுவை தீவிரமாக தேடி வந்தனர். இதை அறிந்த அஞ்சு காதலனுடன் கருங்கல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரும் காதலித்து வருவதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி மதுரை அருகில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.

ஆகவே இருவரையும் சேர்த்து வைக்குமாறும் போலீசாரிடம் கெஞ்சினர். தொடர்ந்து போலீசார் வாலிபரை, இளம் பெண்ணுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர். பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என்ற சட்டம்  உள்ளது.காதலனுடன் தஞ்சம் புகுந்த அஞ்சுவுக்கு 20, அவரது காதலனுக்கு 19 வயதுதான் ஆகிறது. காதலன் இன்னும் திருமண வயதை எட்டவில்லை. போலீசார் சட்டத்தை மீறி காதலர்களை சேர்த்து வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்