SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மினி மாரத்தான் நாகர்கோவிலில் செப்.16ல் நடக்கிறது

9/12/2018 12:30:54 AM

நாகர்கோவில், செப்.12:குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி வரும் 16ம் தேதி அன்று காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சார்ந்த வெற்றியாளர்களுக்கு 22ம் தேதி அன்று நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்களை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார்.

மினி மாரத்தான் போட்டி 16ம் தேதி அன்று காலை 7 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி அண்ணா பஸ் ஸ்டாண்ட், கோட்டார், செட்டிகுளம் ஜங்சன், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை வழியாக நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியை சென்றடையும். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் தங்களது பெயரை நாகர்கோவில், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 15-ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். மேலும், விபரங்களுக்கு நாகர்கோவில், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்