SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்த்தாண்டத்தில் டயர் வெடித்து நடுவழியில் நின்ற அரசு பஸ் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

9/12/2018 12:30:31 AM

மார்த்தாண்டம், செப். 12: மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கி வருகின்றன. பஸ் நிலையத்தில் இருந்து வடக்குத்தெரு நோக்கி வரும் வாகனங்கள் காந்தி மைதானத்தில் இடது பக்கமாக நெடுஞ்சாலையில் ெசன்று பின்னர் இடது பக்கம் திரும்பி வடக்குத்தெருவில் செல்ல வேண்டும். அதுபோல வடக்குத்தெருவில் இருந்து பஸ் நிலையம் வரும் வாகனங்கள் காந்தி மைதானத்தில் நேராக வரும் வகையில் நேற்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை பஸ் நிலையத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. காந்தி மைதானத்தில் இடது பக்கமாக செல்லாமல் அந்த பஸ் வலது பக்கமாக ஒருவழி பாதையில் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் பாலத்துக்கு போடப்பட்டிருந்த உபகரணங்களில் உள்ள ஒரு இரும்பு கம்பியில் பஸ் டயர் மோதியது. இதில் கம்பி உள்ளே நுழைந்து டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவழி பாதையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்