SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருத்தணி அருகே பரபரப்பு கோயில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் திருட்டு

9/12/2018 12:27:11 AM

திருத்தணி, செப். 12:  திருத்தணி அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன்  கழுத்திலிருந்த தங்க நகைகளை திருடியதோடு, உண்டியலையும் கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருத்தணி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் உள்ளது  அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி முரளி (எ) அங்கநாதன் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோயிலை திறக்க அவர் வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறந்து கிடந்ததை பார்த்து. உடனே ஊர் கிராம பொதுமக்களிடம் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த உற்சவர் அம்மன் சிலை கழுத்தில் அலங்கரித்துக் கொண்டிருந்த 3 சவரன் தங்க செயின் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும், ₹10 ஆயிரம் மதிப்புள்ள பூஜை சாமான்களையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் விஷயமாய் அங்கிருந்த உண்டியலை உடைப்பதற்கு காலதாமதமாகும் என உணர்ந்த கொள்ளையர்கள் அதை அப்படியே அலேக்காக தூக்கிச் சென்றுள்ளனர்.
கடந்த அமாவாசை அன்று திருவிழா நடந்த இந்த கோயிலில் பக்தர்கள் மூலம் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமார் ₹30 ஆயிரம் இருக்குமென பக்தர்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 ஏற்கனவே இதே கோயிலில் 2 முறை கொள்ளை  சம்பவம் நடந்திருந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பக்தர்கள், ஊர் பொதுமக்கள் காவல் துறை மீது குற்றம்சாட்டுகின்றனர்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்