SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மூச்சுத்திணறலால் 14 நாட்கள் போராட்டம் மூன்றரை அடி உயரமுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்தது

9/12/2018 12:27:00 AM

* அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு * குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்தார்


திருவண்ணாமலை, செப்.12: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், மூன்றரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்களை கலெக்டர் பாராட்டி குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, குப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(31). அவரது மனைவி உமாமகேஸ்வரி(29). இருவரும் மாற்றுத்திறனாளிகள். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது. மாரியப்பனுக்கு இரண்டு கால்களும் செயலிழந்துள்ளது.உமா மகேஸ்வரி, எலும்பு வளர்ச்சி குறைபாடால் பாதிக்கப்பட்டவர். மூன்றரை அடி உயரமுள்ள (110 செமீ) இவர், பிரசவத்துக்காக கடந்த மாதம் 20ம் ேததி, அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த உமாமகேஸ்வரிக்கு, உயரம் குறைபாடு காரணமாக ஆபரேஷன் மூலம் மட்டுமே பிரசவமாகும், அதி தீவிர சிகிச்சை அளித்தால் மட்டுமே தாய் மற்றும் சேயை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மகப்பேறு தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி தலைமையில், டாக்டர்கள் குழுவினர், தாயையும், சேயையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பிரச்னையால் மிக ஆபத்தான கட்டத்தில் இருந்ததால், இரண்டு உயிரில் ஏதேனும் ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.ருப்பினும், டாக்டர்களின் தீவிர முயற்சியால், உமாமகேஸ்வரிக்கு, கடந்த 4ம் தேதி ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நிலையில் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அரசு மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று, எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது, மருத்துவக் கல்லூரி டீன் நடராஜன், டாக்டர்கள் தர், குப்புராஜ், முருகன், ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, தன்னுடைய சொந்த செலவில் 7 கிராம் தங்க சங்கிலியை குழந்தைக்கு பரிசளித்தார். மேலும், குழந்தைக்கு அருண்சந்திரன் என பெயர் சூட்டி, உடனடியாக பிறப்பு சான்றையும் வழங்கினார். அப்போது, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை பெற்று வாழ்வதாகவும், நிரந்தரமாக குடியிருக்க வீடு வழங்குமாறு மாற்றுத்திறனாளி உமாமகேஸ்வரி கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பசுமை வீடு கட்டித்தருவதற்கான உத்தரவையும் உடனே கலெக்டர் வழங்கினார்.தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘உயரம் குறைவான பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது மிகவும் சவாலானது. இரண்டு உயிரில் ஒன்றை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில், அந்த சவாலை எதிர்கொண்டு தாயையும், சேயையும் காப்பாற்றிய டாக்டர்களை பாராட்டுவதற்காக நேரில் மருத்துவமனைக்கு வந்தேன். இந்த சம்பவம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை பொதுமக்களிடம் மேலும் அதிகரிக்கும்’ என்றார்.தொடர்ந்து, மகப்பேறு நல தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி கூறியதாவது:எலும்பு வளர்ச்சி குறைந்து, குள்ளமாக பிறக்கும் நோய், 40 ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கும். இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகள், கால்கள் குறுகியதாக இருக்கும். ஆனால், அறிவுத்திறன், மூளை வளர்ச்சி, கருவுற்றல் ஆகியவை நன்றாக இருக்கும்.

இதுபோன்ற உயர குறைபாடு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் கருவுற்றால், உயர் ரத்த அழுத்தம் சுவாச கோளாறு, குறை பிரசவம் போன்ற சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், இடுப்பு எலும்பு குறுகியதாக இருப்பதால், ஆபரேஷன் மூலம் மட்டுமே பிரசவிக்க செய்ய முடியும். நார்மல் பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை.எனவே, உமாமகேஸ்வரியின் பேறு காலத்தை, மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர், இருதய நிபுணர், நுரையீரல் நிபுணர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் கொண்ட குழு கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடர்ந்து கண்காணித்தது.கடந்த 4ம் தேதி நடந்த ஆபேரஷன் மூலம் நல்ல நிலையில் 2.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்தையின் தாய்க்கு கருத்தடை ஆபரேஷனும் செய்திருக்கிறோம். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் இதுபோன்ற சவாலான பிரசவம் நடந்தது இதுதான் முதன்முறை. மாநில அளவிலும், மூன்றரை அடி உயரமுள்ள பெண்ணுக்கு பிரசவம் என்பது அரிதானதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்