SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்களை முறைப்படுத்துவதில் போலீசார் மெத்தனம்

9/12/2018 12:26:52 AM

திருவள்ளூர், செப். 12:‘’ஒரு 5 நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்’’ என டாக்டர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். உயிருக்கு போராடும் நோயாளிக்கு, ‘’கோல்டன் அவர்’’ எனப்படும் ஒவ்வொரு கடைசி வினாடியும் முக்கியம். ஆனால், பல மைல் து?ரத்தில் இருந்து, ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள், மருத்துவமனையின் முன் நிலவும் நெரிசலால் உயிரிழக்கும் அவலம் திருவள்ளூரில் ஏற்பட்டுள்ளது.\திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை, ஜெ.என்.சாலையில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வருகின்றன. ஆம்புலன்ஸ்களின் வசதிக்காக, இரு நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் வழியாக, ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்கின்றன.ஆனால், இந்த நுழைவாயிலின் முன் நிறுத்தப்படும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனை எங்கே என தேடும் அளவுக்கு, பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் மறைத்து நிற்கின்றன. பயணிகளும் அதே இடத்தில் நிற்பதால், உள்ளே நுழைய முடியாமல் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதன் உள்ளே அரசின், அம்மா உணவகமும் இருப்பதால், எப்போதுமே இங்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. நடுரோட்டில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், அவ்வழியாக பின்னால் வரும் அனைத்து வாகனங்களும், ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இந்த நேரத்தில், அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களால், மருத்துவமனையின் உள்ளே நுழைய முடிவதில்லை.மருத்துவமனை அருகில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட வேண்டிய பஸ்கள், ஆட்டோக்கள் அனைத்தும், மருத்துவமனை நுழைவாயில் முன் நிறுத்தப்படுவதே சிக்கலுக்கு காரணம். இதனால், உள்ளே செல்லும் நுழைவுவாயிலின் கேட்டையே மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது. ஆம்புலன்ஸ் வரும்போது மட்டும் இந்த கேட் திறக்கப்படுகிறது. அப்படியிருந்தும், ஆட்டோ டிரைவர்கள் அங்குதான் நிறுத்துகின்றனர். தினமும் இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், நகர போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது கிடையாது. மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’மருத்துவமனை நுழைவாயில் அருகே ஆட்டோக்கள், பஸ்கள் நிறுத்தப்படுவதால் தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மருத்துவமனை செக்யூரிட்டிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்படுகிறது’ என்றார். எனவே, அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் ஆட்டோக்கள், பஸ்கள் நிறுத்துவதை தடுத்து ஆம்புலன்ஸ் செல்லும் வகையில், அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2019

  26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்