SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்யாறு அருகே மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்து மிரட்டல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

9/12/2018 12:26:36 AM

செய்யாறு, செப்.12: மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பெண். பிளஸ் 2 படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் விநாயகம்(35). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதி, மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி விநாயகம் உல்லாசமாக இருந்துள்ளார். தொடர்ந்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், மைனர் பெண் கர்ப்பிணியானார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மைனர் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விநாயகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு விநாயகம், ‘வெளியே கூறினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.இதுகுறித்து மைனர் பெண் நேற்றுமுன்தினம் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்