SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

9/12/2018 12:26:12 AM

ஆரணி, செப். 12: ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆரணி அடுத்த இரும்பேடு கிராமம், தோப்பு தெரு மற்றும் மசூதி தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இரும்பேடு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சரிவர குடிநீர் வழங்கவில்லையாம்.இதனால், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஆரணி - ஆற்காடு பைபாஸ் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையான குடிநீர் வழங்கினால் தான் மறியலை கைவிடுவோம் என்று பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ஊராட்சி செயலாளரை வரவழைத்து, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள், சாலைமறியலை கைவிட்டனர்.இதற்கிடையே ஊராட்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டவுடன் அங்கிருந்த பொதுமக்களை அழைத்து ஏன் சாலை மறியலில் ஈடுபட்டீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். முறையான குடிநீர் வழங்கினால் நாங்கள் ஏன் மறியலில் ஈடுபட போகிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து, சிறிது நேரம் மீண்டும் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து ஊராட்சி செயலாளர் இனிமேல் முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்து சென்றார். இதையேற்று பொதுமக்களும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்